மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் மனைவி கண் முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் எலந்தங்குடியில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு முகமது ரபீக்கும் அவரது மனைவி அபாரத் நிஷாவும் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை கண்ணாரதெரு […]
