அரசு பேருந்து முதியவர் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வீரவநல்லூரில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரசாக் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அப்துல் ரசாக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ரசாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
