இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள வெள்ளரி ஓடை பகுதியில் வெள்ளைச்சாமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைச்சாமி இருசக்கர வாகனத்தில் புத்தேந்தலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்ற போது கீழக்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]
