அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புனரி காவல் நிலையம் அருகில் உள்ள சோதனைச்சாவடி முன்பு சொக்கலிங்கபுரம் சாலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் சிங்கம்புணரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
