கள்ளக்குறிச்சியில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் கல்வராயன் மலை அடிவாரப்பகுதியான புதுப்பட்டு, மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பேருந்து மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் வேறு வழி இல்லாமல் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் […]
