ஆலங்குளம் – மதயானைபட்டி சாலையில் சென்று வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் சூரியூர் ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து வில்லாரோடை பாதையாக மதயானை பட்டி ஊராட்சி வரை சுமார் ஆறு கிலோ மீட்டர் அளவிற்கு புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து […]
