ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் உள்ள ரெட்டையூரணி பகுதியில் அருணாச்சலம்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று உச்சிப்புளியை அடுத்துள்ள அலைகாத்தவலசைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து திரும்பி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து […]
