திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு […]
