தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விடுமுறை தினத்தை பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். இதனால் அனைவரும் ஒரே நாளில் பயணம் செய்யும்போது பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. […]
