அரசு பேருந்தில் பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது கலைவாணி அவரது பையிலிருந்த பர்சை திருடியதாக பேருந்தில் ஏறிய பெண் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் வசிக்கும் வள்ளி என்பது […]
