அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்தப் பேருந்து செஞ்சி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் பேருந்தின் மீது கல்லை தூக்கி வீசியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
