தமிழகத்தில் பள்ளிகளுடைய ஆவணங்களையும், வருவாயையும் ஆய்வு மேற்கொண்ட பின்பே அரசின் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசின் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும். அதற்குரிய ஆய்வு பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து பள்ளிகளுக்கான 4 வகை சான்றிதழ்களை பெற வேண்டும். […]
