கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை அதிபர், வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம் எனக் காட்டமாக கூறியுள்ளார். இலங்கை நாட்டில் சரிவர பணியாற்றாத அரசு ஊழியர்கள், ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கலந்துகொண்டார். இது குறித்து கூட்டத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது, “சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் […]
