தமிழகத்தில் அரசாணை 115 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு மனித வள மேம்பாட்டு துறை அரசாணை 115-ஐ பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. […]
