தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் தங்களின் விடுப்பு பலன்களை பணமாக்க தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் இன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,தமிழகத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை விதிகளில் ஒரு அரசு ஊழியரை பணியிலிருந்து நீக்குதல் என்பது அவரது கடந்த கால சேவையை ரத்து செய்யும் என்ற விதி புதிதாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தனது சேவை அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் கடந்த கால சேவையை […]
