அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கார்க்குடி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் உரையாடி கல்வியில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை கூறினார். அதன்பின் பள்ளியின் வகுப்பறை, ஆய்வகம், கணினி அறை, சமையல் […]
