தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.24 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் […]
