தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் […]
