சாடிவயல் பகுதியில் அரசுப் பேருந்தை குட்டியானை வழிமறித்து விரட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி ரோடு அருகில் சாடிவயல் பகுதியில் ஐந்து மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் கிடையாது. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் சாடிவயல் பகுதியில் இருந்து வெள்ளபதி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு குட்டியானை ஒன்று வந்துள்ளது. அந்தக் குட்டியானை […]
