அதிமுகவில் கொடிப்பிடிக்கும் அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக முடியும், இந்த நிலை திமுகவில் சாத்தியமா? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். “சுரதா” என்ற புனைப்பெயரில் பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கவிஞர் சுப்புரத்தினதாசனின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மதியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், “பல்வேறு கவிதைகள் […]
