“மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடும் விவசாய போராளிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போராட்டம் இன்று […]
