செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்னைக்கு DMK ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்பவும் சொல்றேன், இணைந்து செயல்படும் நான் என்னைக்குமே சொன்னது இல்லையே […]
