தமிழர்களின் உடைய கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை காக்கக்கூடிய பெரும் போர் அந்தப் போரிலே வெல்வோம் என முக.ஸ்டாலின் சூளுரைத்தார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பரிபோகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பரிக்கப்பட்டு விட்டது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பரிக்கப்பட்டு விட்டது. குடி உரிமை சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை சீக்கிரம் பறிபோக போகுது. […]
