நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நான் ஒரு மணி நேரம் முதல்வருடன் பேசியதாக இபிஎஸ் குற்றம் சாட்டுகிறார். நான் அப்படி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். ஒருவேளை அதனை நிரூபிக்க தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக என்னைப் பற்றி ஏதாவது விமர்சனம் […]
