எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை உள்ள அரசியல் பயணத்தை தெரிந்துகொள்வோம். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் 1954ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பிறந்தார். தமது 17வது வயதில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார். 18 வயதில், சிலுவம்பாளையம் அதிமுக கிளை செயலாளர் பதவி வகித்தார். 1985ம் ஆண்டு சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கினார். 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெ., அணி சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு […]
