அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய பாலை பட்டாபிராமனின் வளரும் தமிழகம் கட்சியில் தெற்கு மாவட்டச் செயலாளராக ரஜினிபாண்டி இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினிபாண்டி […]
