தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், […]
