அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி அதிமுக அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து பட்டியல் எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ரொம்ப நல்ல அமைச்சர். அவர் நேத்து என்ன பண்றாரு ? முக கவசம் போடணும்னு சொன்னாரு. பத்தாம் தேதி அன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம் என்று சொல்கிறார். அப்ப 11ஆம் தேதி எப்படி பொதுக்குழு […]
