இந்தியாவில் தேர்தலின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் வைத்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியை கையாளுகின்றனர். இந்த தேர்தல் வாக்குறுதிகளில் எப்படியாவது ஒரு இலவச திட்டத்தையும் சேர்த்து விடுகிறார்கள். இந்த இலவச திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சில வசதி படைத்தவர்களுக்கும் சென்றடைகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகிறது என்ற கருத்தும் தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் எனக் […]
