Categories
தேசிய செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தீவிர குற்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட, அதாவது தேர்தலில் ஈடுபடுவது, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது போன்றவற்றிற்கெல்லாம் தடை கோரி […]

Categories
உலக செய்திகள்

அடடே! என்ன ஆச்சர்யம்?… வாக்கு பெற… கழிவறையை சுத்தப்படும் அரசியல்வாதிகள்… எந்த நாட்டில் தெரியுமா?…

கென்யா நாட்டில் வரும் 9-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் மூன்று தேர்தல்கள் நடக்க இருப்பதால் வேட்பாளர்கள் பொதுத் கழிவறைகளை சுத்தம் செய்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். கென்யா நாட்டில் வரும் ஒன்பதாம் தேதி அன்று ஆளுநர் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் களமிறங்கியிருக்கும் அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்காக பல பணிகளை செய்து வருகிறார்கள். டீக்கடையில் நின்று டீ போடுவது, பரோட்டா கடையில் பரோட்டா […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இது கிடையாது!”.. அரசியல்வாதிகள் கோரிக்கையால் கொதிப்பில் மக்கள்..!!

சுவிட்சர்லாந்தின் அரசியல்வாதிகள் கூறிய கருத்து மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் டெல்டா வகை மாறுபாடு தற்போது அதிகரித்திருக்கிறது. எனவே தடுப்பூசி  செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். எனினும் சில மக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லது வேண்டுமென்றே சிலர் தடுப்பூசி  செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்படுபவர்களில், பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலர் கோரிக்கை வைத்தது, மக்களிடையே பிரச்சனை மற்றும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுக்க 50,000 பேரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட நிறுவனம்.. அதிர வைக்கும் தகவல்..!!

இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் ராஜ குடும்ப உறுப்பினர்கள் செய்தியாளர்கள் போன்ற முக்கிய நபர்களை ரகசியமாக உளவு பார்த்ததாக தெரியவந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் NSO என்ற தனியார் நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரித்தது. இது உளவு மென்பொருளாகும். மேலும் இந்நிறுவனம் அரசுடன் மட்டுமே இணைந்து செயலாற்றுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 2016 ஆம் வருடத்திலிருந்து தற்போது வரை உலகம் முழுக்க சுமார் 50,000 முக்கிய நபர்களுடைய தொலைபேசி தகவல்களை உளவு பார்த்திருக்கிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

இனி இவர்களுக்கு விதிவிலக்குகள் கிடையாது..! பேஸ்புக் எடுத்துள்ள அதிரடி முடிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகளுக்கென கொண்டுவரப்பட்ட விதிவிலக்குகள் தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் பிரபல வலைதளமான ஃபேஸ்புக் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக திகழ்கிறது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு விதிவிலக்குகளை அளித்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகள் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது வன்முறையை தூண்டும் விதமாக இருந்தாலும் கூட அவை அனைத்தும் ஒரு செய்தி மற்றும் பொதுநலன் உடையதாக கருதப்படுகிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, ஈபிஎஸ், ஸ்டாலின் பாஸ் ஆவார்களா?… கிண்டலடித்த சீமான்…!!!

அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் மோடி, ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் பாஸ் ஆவார்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உஷாரய்யா உஷாரு, அரசியல் புள்ளிகள் உஷாரு… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

“ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் கூட்டணி”… கவலையில் உயர் நீதிமன்றம் …!!

ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருப்பதாக நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது பல்வேறு சூழலில் போலீசார் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் யாரும் வாய் திறக்காதது வேதனை தருவதாக, உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]

Categories
உலக செய்திகள்

மூன்று வருடங்கள் பயங்கரவாத சம்பவங்கள் இல்லை…. பாதுகாப்பான சூழல் அதிகரித்துள்ளது…!!

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி மாகாணத்தில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்காத அளவு பாதுகாப்பு சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இன மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உணர்வானது அதிகரித்ததனால் பல நன்மைகளும் கிடைத்திருக்கின்றனர். இத்தகைய செயலானது சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பிற்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனாலும் பயங்கரவாத எதிர்ப்பு துறையில் அமெரிக்காவின் அரசியல் துறை இரட்டை நிலைப்பாட்டினை மேற்கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தொடர்ந்த நடவடிக்கைகள் மீது அவதூறு பரப்பியும், அமெரிக்க அரசியல்வாதிகள் பல வதந்திகளை பரப்புவதிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சின்ஜியாங்கில், […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பாலிவுட் பிரபலம் மறைத்த உண்மை! கலங்கி நிற்கும் அரசியல்வாதிகள்.!

சீனாவின் வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |