கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததை தடுக்க முயன்ற மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலை திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. தூண்டில் வளைவு அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக மீனவர்கள் போராடி வந்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் […]
