அருந்தமிழ் குன்றமாக இருந்த ஊர் பெயர் ஆறு முக்கிய ஊர்களை இணைப்பதால் அரக்கோணம் என மாறியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் ரயில் சேவை தொடங்கிய போதே அரக்கோணத்தில் ரயில் நிலையம் செயல்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஓடுதளத்தை கொண்ட கடற்படைத் தளமும், ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளியும் உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான பயிற்சி பள்ளியும் இங்கு செயல்பட்டு வருகிறது. விவசாயமும், நெசவும் பிரதான தொழில்களாக உள்ளன. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ஒருமுறை சுயேச்சை வேட்பாளர் […]
