அரக்கோணம் ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்புடன் இயங்கி வரும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்தில் சென்று வருவார்கள். இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுனர் இல்லாமல் மின்சார ரயில் திடீரென்று பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயனற்று இருந்த தண்டவாளத்தில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற மின்சார ரயில் மண்ணில் சிக்கி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
