குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை வடிவமைத்து கட்டிட பணியை மேற்பார்வைட்டவரின் பேரனின் கைவண்ணத்தில் உருவாகிறது அயோத்தி ராமர் கோவில். அது பற்றிய தகவல்களை பார்க்கலாம். உத்தரப்பிரேதேசம் மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் நாகர் கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவிமாடங்களுடன் 161 அடி உயர கலசகோபுரத்துடன் அமைய உள்ள இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை குஜராத்திலுள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர் ஜி.சோம்புராவின் பேரன் அகமதாபாத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பாய்சோமுர ஏற்றுள்ளார். […]
