அயோத்தியில் ராமா் கோவிலானது கட்டப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் இறுதிக்குள் கோவிலைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. ராமா் கோவிலை மையப்படுத்தி அயோத்தி நகா் முழுவதையும் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அயோத்தியில் ரூபாய்.1,057 கோடி மதிப்பிலான 46 வளா்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று துவங்கி வைத்தாா். அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது, நவீன இந்தியாவின் புது உத்தரபிரதேசத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் அயோத்தி முக்கியபங்கு வகிக்கும். பிரதமா் […]
