அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். இந்த சூழலில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர் பேசியதாவது, ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்துள்ளது கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது. அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும் 2024 ஆம் வருடம் ஜனவரி 14ஆம் தேதி […]
