மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா (வயது 43). இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்துள்ளார். இதனிடையே, அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய, ஆபாசமான கருத்துக்கள் சில கணக்குகளால் பதிவு செய்யப்பட்டு வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச கருத்துக்களை தெரிவித்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். 50 […]
