மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரின் மனைவி போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து ஏற்படுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவருடைய மனைவி அம்ருதா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்து ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன் என்று கூறினார். மும்பை மாநகரில் தினசரி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் தங்களின் குடும்பங்களுக்காக மக்கள் நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் சுமார் மூன்று சதவீத குடும்பங்களில் […]
