அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களும் மீண்டும் வேலைக்கு வருமாறு சுகாதாரத்துறை அழைத்திருப்பதை இராமதாஸ் வரவேற்றிருக்கிறார். பா.ம.க வின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் இது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்களையும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களையும் மீண்டும் வேலைக்கு சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கக்கூடியது. அவர்களது வாழ்வாதாரத்திற்கு இது பாதுகாப்பாக இருக்கும். திடீரென்று மருத்துவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
