கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா-மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் அருகே இருக்கும் சந்தை ஊரை சேர்ந்தவர் வக்கீல் மகாலிங்கம். இவர் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரில் மனைவி பழனியம்மாள்(வக்கீல்), மகள் சாதனா, மகன் எஸ்வந்த், மற்றும் உறவினர் விஸ்வநாதன், தமிழ்செல்வி, கிருத்திகா உள்ளிட்டோர் பயணம் செய்தார்கள். இந்த காரானது சுங்கச் […]
