அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . கடலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் நாங்கள் அரசு மினி கிளினிக்கில் மருத்துவர்களாக அனுமதிக்கப்பட்டோம். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுதல், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், தடுப்பூசி போடும் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வந்தோம். […]
