நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக்குகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க படுவதாகவும் இதனால் அம்மா கிளினிக்குகள் அவசியமற்றது எனவும் கூறி […]
