வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதிக்கு அருகில் வன துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பான பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான […]
