கோவிலில் உள்ள அம்மன் சேலையை மர்மநபர்கள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் 1500 ஆண்டு பழைமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள அம்மனுக்கு சாற்றியிருந்த புடவையை மர்ம நபர்கள் எரித்துள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணியினர் வேலூர் கோட்டை அமைப்பாளர் டி.வி. ராஜேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது, காவேரிப்பாக்கத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் […]
