காவல்துறையினர் தேடுவதால் திருடிச் சென்ற அம்மன் சிரசை மர்ம ஆசாமிகள் கோவிலில் வைத்து சென்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பி குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் தரப்பில் வருகின்ற 16-ஆம் தேதி திருவிழா நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து திருவிழா நடத்த அனுமதி […]
