தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல்விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே பாடி குமரன் நகரில் 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
