சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் நடந்து வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசியதாவது “சென்னை முழுதும் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியே கால்வாய் ஒன்று 2 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பாக கட்டும் பணியானது தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். சென்னை மாநகராட்சி, நீா்வளத்துறை, […]
