தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆகஸ்ட் .25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு களுக்கான பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 25 […]
