தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல் பரவுவதாக அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே பேரண்டபள்ளி கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அதன்பின் மகப்பேறு உதவி திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவைகளை 25 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து அமைச்சர் மா. […]
