தமிழகத்தில் நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் […]
